சிறைவாசிகள் எழுதிய SSLC தேர்வில் அப்துல் ஹக்கீம் முதலிடம் பிடித்து சாதனை!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி அப்துல் ஹக்கீம் 421மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தில் 226 சிறைக்கைதிகள் தேர்வு எழுதினர். இதில் 199 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  • புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி அப்துல் ஹக்கீம் 421 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
  • புதுக்கோட்டை சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி பிரசாத் 416 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
  • திருச்சி சிறையில் உள்ள கைதி சரவணன் 412 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர்களை சிறைத்துறை அதிகாரிகள் வாழ்த்தினர்.
Close