அதிரையில் குர்ஆன் மனனம் செய்துகொண்டே பத்தாம் வகுப்பில் 483 மதிப்பெண்கள் பெற்ற தஸ்லீம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

imageதமிழகம் முழுவதும் கடந்த 25ஆம் தேதி அன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தன. இதில் அதிரையை பொருத்தவரை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவிகளுக்கு இணையாக மாணவர்களும் அதிக மதிப்பெண்களை பெற்றனர். அந்த வகையில் அதிரை புதுத்தெரு தென்புறம் ஜெகபர் சாதிக் அவர்களின் மகன் தஸ்லீம் இமாம் ஷாபி ஆண்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து 483 மதிப்பெண்கள் பெற்று அப்பள்ளி அளவில் முதல் இடமும் அதிராம்பட்டினம் அளவில் பத்தாம் வகுப்பில் இரண்டாவது மதிப்பெண்ணும் பெற்று அசத்தினார்.

இவர் உலகக்கல்வியில் மற்றும் தேர்ந்தவர் என்று நினைத்தால் அது தவறு. இவர் பள்ளியில் படித்துக்கொண்டே மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் அதிரை இஜாபா பள்ளியில் குர்ஆன் மனனம் செய்து வருகிறார். இது வரை 22 ஜுஸ்வுக்களை மனனம் செய்துள்ளார்.   உலக கல்விக்காக பலர் எதையும் இழக்க தயாராகி வரும் நிலையில் தனக்கு பத்தாம் வகுப்பு தேர்வு உள்ளது என்பதற்காக மார்க்க கல்வியை இழக்காமல் இரண்டிலும் ஒரு சேர செய்து முடித்துள்ளார்.

இவரை போன்று அதே பள்ளியில் சஹல் , சுஹைல் என்ற இரட்டை சகோதரர்களும் இஜாபா பள்ளியில் குர் ஆன் மனனம் செய்து கொண்டு அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்று மாணவர்கள் அனைவரும் உலகக்கல்வி மார்க்க கல்வி இரண்டையும் இரு கண்களாக நினைத்து இரண்டிலும் சாதித்து காட்ட வேண்டும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author