இளையான்குடியில் கால்பந்தாட்ட தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அதிரை AFFA அணி!

இளையான்குடியில் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதில் லீக் போட்டியில் AFFA அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து அதிரை AFFA அணியை எதிர்த்து இன்று அரை இறுதி போட்டியில் கீழக்கரை அணி விளையாடியது. இதில் அதிரை  AFFA அணியினர் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து நாளைய தினம் இறுதி போட்டியில் இந்த அணி விளையாட உள்ளது.

இதில் அதிரை AFFA அணி வெற்றி பெற்று கோப்பையை கைபற்ற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close