11 வார்டு பகுதியை RDO மற்றும் பட்டுகோட்டை தாசில்தார் நேரில் ஆய்வு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. கழிவு நீர் செல்லும் வாய்க்கால் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது.இதனால் கழிவு நீர் தேங்கி கானபடுவதால் துர்நாற்றம் வீசுகின்றது. இப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் வணிகர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக பலமுறை அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பழுதடைந்த சாலையை சீரமைக்கப்படவில்லை. சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை. இதே நிலை நீடித்தால் நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் சாக்கடையால் தொற்று நோய் பரவி உயிருக்கு ஆபத்து ஏற்படும். பழுதடைந்த சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள்  மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைத்து, சாக்கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்  அதிரை மனித உரிமைகள் கழக அமைப்பாளர் OKM.சிபகத்துல்லாஹ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு  ஒன்று மாவட்ட ஆட்சியர் இடம் அளித்தனர் .

இதனை அடுத்து இன்று விநாயகர் ஊர்வலத்திற்காக வந்த RDO மற்றும் பட்டுகோட்டை தாசில்தார் ஆகியோரை நேரில் சென்று அதிரை மனித உரிமைகள் கழக அமைப்பாளர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்கள் அழைத்து வந்து 11 வார்டு அவல நிலையை காட்டினார்கள். இதனை அடுத்து   RDO மற்றும் பட்டுகோட்டை தாசில்தார் இருவரும்  ஆய்வு செய்து ஒரிரு வாரங்களில் சாலை சீர் செய்து கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும் என்று கூறி சென்றார்கள் . 

தகவல் :OKM .பைசல்      

Advertisement

Close