முத்துப்பேட்டையை அடுத்த கற்பகநாதர் குளம் வளவன் ஆறு அருகே மீனவர் சங்கத்துக்குச் சொந்தமான கூரை கொட்டகை உள்ளது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன. இதை முன்னாள் மீனவர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் என்பவர் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று இரவு ராஜமாணிக்கம், கொட்டகையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென கூரை தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த ராஜமாணிக்கம் கூரையில் இருந்து வெளியே தப்பி ஓடி, சத்தம் போட்டார். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூரையில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கூரை முற்றிலும் எரிந்து அதில் வைக்கப்பட்டு இருந்த மீன்பிடிக்க தேவையான 300 கிலோ வலை, 20-க்கும் மேற்பட்ட ஐஸ் பெட்டிகள், 15-க்கும் மேற்பட்ட பைப்பர் போட்டின் பாய்கள், 200 கிலோ கயிறுகள், என்ஜின் உள்ளிட்ட மீன்பிடி கருவிகள் சாம்பல் ஆயின. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என கூறப்படுகிறது.
இத் தீ விபத்து மின்கம்பிகளில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த இடத்தை மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றியக்குழு உறுப்பினர் உலகநாதன், கிராம நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
-muthupettai.org
Advertisement

' />

முத்துப்பேட்டை அருகே தீ விபத்து ! ரூ.4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி கருவிகள் எரிந்து சாம்பலாயின !

Close