மக்காவில் ஆறுவயதிலேயே திருக்குர்ஆனின் 30 பாகங்களையும் மனனம் செய்த சிறுவன் !

   மக்காவில் வசித்துவரும் ஆறு வயது மட்டுமே நிறைவடைந்த ஒரு சிறுவன் திருமறை அல் குர்ஆனின் 30 பாகங்களையும் தனது ஆறு வயதிலேயே முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்துள்ளான்

அவனது பெயர் முஸ்ஹப் சத்தீக் அமீர் ஹம்ஸா என்பதாகும்:

அவனை ஆரம்பகல்விக்காக பாட சாலையில் முதல் வகுப்பில் சேர்ப்பதர்க்காக அவனது பெற்றோர்கள் மக்காவில் உள்ள சஹ்தியா என்ற ஆரம்ப பள்ளிக்கு அழைத்து வந்தனர்

முதல் வகுப்பில் சேருவதர்கு முன்பே அந்த சிறுவன் திருமறை முழுவதையும் மனனம் செய்துள்ளதை அறிந்த அந்த பள்ளியின் மேலாளர் ளயிபுல்லா அந்த சிறுவனையும் அவனது தந்தையையும் வரவேற்று மரியாதை செய்தார்

அந்த அதிசய சிறுவனின் அழகிய படத்தையும் பள்ளி நிறுவாகம் அவனுக்கு மரியாதை செய்வதையும் தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள்

இந்தபோன்ற முன்மாதிரி சிறுவனை பார்த்து நமது சமுதாயத்தில் இது போன்ற பிள்ளைகள் அதிகம் உருவாக வேண்டும் இறைவன்  அதற்கு அருள் செய்ய வேண்டும்

Advertisement

Close