சாலையை சீர்செய்த பேரூராட்சி நிர்வாகத்திற்கு ததஜ நன்றி அறிவிப்பு !

அதிரை கடைத்தெருவில் இருந்து காலேஜ் ரோடு வழியாக காதர் முகைதீன் ஆண்கள் பள்ளி, கல்லூரி மற்றும் E C R க்கு வாகனத்தில் செல்பவர்களுக்கு, அதே  போல் அங்கிருந்து இந்த வழியாக வருபவர்களுக்கும் நீண்ட நாட்களாக E C R சாலையை இனைக்கும் இடத்தில் குண்டும் குழியுமாக வாகனங்கள் சிரமம்யின்றி ரோட்டை அடைய முடியாத நிலை இருந்தன இதனால் பல வாகனங்களும் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் சிரமத்திற்கு சில நேரங்களில் விபத்திற்கு உள்ளாயினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பேரூராட்சி தலைவரை அணுகி அதிகமான விபத்துக்களை ஏற்படுத்தும்  இந்த சாலை இணைப்பை சீர்செய்யும் படி கேட்டுக்கொள்ளப்பட்டன இந்த கோரிக்கையை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் இந்த சாலை இணைப்பை சீர் செய்வதற்கு ஏற்பாடு செய்து பணிகள் நடைபெறுகிறது இந்த சாலை இணைப்பை சீர்செய்த பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத்தலைவர், செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டது .

-அதிரை ததஜ

Advertisement

Close