Internet'ல் வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை தொடர்ந்து பெற உறுதிமொழி
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய
சான்று மற்றும் ஆன்லைனில்
வேலைவாய்ப்பு பதிவு செய்வது பற்றி விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு: மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்
சென்று பதிவு செய்யும்
சிரமத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன்
முறையில் பதிவு, புதுப்பித்தல் மற்றும்
கூடுதல்
பதிவு ஆகியவற்றை மேற்கொள்ளும்
வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில்
வேலைவாய்ப்புப் பதிவு மேற்கொள்ள
tnvelaivaaippu.gov.in/Empower என்ற
இணையதள முகவரிக்கு சென்று பின்னர்,
கிரியேட் நியூ யூசர் ஐடி (create new user
ID) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் தங்களது பெயர், பிறந்த
தேதி உள்ளிட்ட
விவரங்களை பதிவு செய்து யூசர்
ஐடி மற்றும் பாஸ்வேர்டு (User Id and
Password) உருவாக்கி கொள்ள வேண்டும்.
பின், கண்டினியூ (Continue) செய்ய
வேண்டும். பின்னர் தாயின் பெயர்,
சாதி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய
வேண்டும்.
இதையடுத்து, காண்டாக்ட் டீடெய்ல்ஸ் (Contact
details) எனும் முகவரியில்
கல்வி விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இவை அனைத்ததைம் பதிவு செய்த பின்
ஓகே (ok) என்பதை கிளிக் செய்தால்
பதிவு எண் ஒன்று வழங்கப்படும். அந்த
பதிவை நாம் பிரிண்ட் (print) எடுத்துக்
கொள்ளலாம். யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை
தவறாமல் குறித்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை புதுப்பித்தல்
அல்லது கூடுதல்
பதிவுக்கு இது அவசியமாகும்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை:
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஏப்ரல் மாதம்
சுய உறுதிமொழி ஆவணத்தை வழங்க
வேண்டும். சுய உறுதிமொழி ஆவணம்
வழங்க தவறினால், அந்த
ஆண்டிலிருந்து உதவித்தொகை வழங்குவது
நிறுத்தப்படும். சுய உறுதிமொழி ஆவண
விண்ணப்பத்துடன்
வேலைவாய்ப்பு அடையாள அட்டை அசல்
மற்றும் நகல், நடப்பு வங்கி கணக்கு அசல்
மற்றும் நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
அளிக்கப்பட்ட ஒப்புகைச்
சீட்டு ஆகியவற்றை இணைத்து வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் நேரில்
சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவு மூப்பு: பணி சூழல் காரணமாக ஓர்
இடத்திலிருந்து மற்றொரு
இடத்திற்கு செல்லும்
போது பதிவு மூப்பு எதுவும் பாதிக்காது.

Close