தீவிர கண்காணிப்பில் அதிரை!

விநாயகர் சதுர்த்திவிழா நாளை 29–ந் தேதி நாடு முழுவதும் இந்து மதம் சகோதரர்களால் கொண்டாப்படுகிறது. அதிரையில் வழக்கமான முறையில் விநாயகர் சதுர்த்திவிழா நடைபெற உள்ளது. 

இதற்க்காக தமிழகத்தின் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து திருச்சியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் அதிரைக்கு சென்று வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிரையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிரையில் இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடஉள்ளனர். மத்திய அதிவிரைவு படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினரும் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனை அடுத்து தற்போது அதிரையில் போலிசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி விடுமுறையை முன்னிட்டு ஊருக்கு திரும்பும் அதிரை கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி அடையாள அட்டையை வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.தீவிர கண்காணிப்பில் அதிரை!

Advertisement

Close