நம்ம மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி!

தஞ்சாவூர் மாவட்டத்தில்
உள்ள அரசு
அலுவலகங்களில் பொதுமக்கள்
அளிக்கும் மனுக்களின்
நிலையை இணையத்தில்
அறிந்து கொள்ள
வசதி செய்யப்பட்டுள்ளது
என்றார் ஆட்சியர்
என். சுப்பையன்.

தஞ்சாவூரில் இந்தத்
திட்டத்தை செவ்வாய்க்கிழமை
தொடக்கி வைத்த
அவர் மேலும்
தெரிவித்தது:
பொதுமக்கள் அளிக்கும்
மனுக்களின் நிலையை
அறிந்து கொள்ள
ஏதுவாக மாவட்டத்தில்
புதிய திட்டம்
நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதல்
கட்டமாக குடும்ப
அட்டை, சமூகப்
பாதுகாப்புத் திட்டங்கள்,
இலவச வீட்டு
மனைப் பட்டா,
உள் கட்டமைப்பு
வசதிகள் ஆகியவை
தொடர்பாக அளிக்கப்படும்
மனுக்களின் நிலையை
அறிய ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்
கீழ் வட்டாட்சியர்கள்,
சமூகப் பாதுகாப்புத்
திட்டத் தனி
வட்டாட்சியர்கள், வட்ட
வழங்கல் அலுவலர்கள்,
இதர தொடர்புடைய
அலுவலர்களுக்குப் பயனாளி
பெயர், கடவுச்
சொல் வழங்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், பொதுமக்கள்
அளிக்கும் குடும்ப
அட்டை கோருதல்,
முதியோர் உதவித்தொகை,
விதவை உதவித்தொகை,
மாற்றுத் திறனாளிகள்
உதவித்தொகை, கணவனால்
கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை
உள்ளிட்ட சமூகப்
பாதுகாப்பு நலத்
திட்டங்கள், இலவச
வீட்டு மனைப்
பட்டா, உள்கட்டமைப்பு
வசதிகள் குறித்த
மனுக்களை தொடர்புடைய
அலுவலர்களால் இணையவழி
மூலம் பதிவு
செய்து மனு
எண் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்களது
மனுக்களுக்கு வழங்கப்பட்ட
மனு எண்ணையோ
அல்லது செல்லிடப்பேசி
எண்ணையோ இணையதள
முகவரியில் உள்ளீடு
செய்து தங்களது
மனுக்களின் நிலையை
அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதியை
முழுமையாகப் பயன்படுத்திக்
கொள்ள பொதுமக்கள்
தங்களின் செல்லிடப்பேசி
எண்ணை வழங்க
வேண்டும். இதன்
மூலம், பரிசீலனை,
அனுமதித்தல், நிராகரிப்பு
என 3 நிலைகளிலும்
மனு குறித்த
பதில் அளிக்கப்படும்.
நிராகரிக்கப்படும்
மனுக்களுக்கு அதற்கான
காரணத்தையும் அறிந்து
கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தை
மாவட்ட அளவில்
மாவட்ட வருவாய்
அலுவலர், திட்ட
அலுவலர், சார்
ஆட்சியர், கோட்டாட்சியர்கள்,
மாநகராட்சி, நகராட்சி
ஆணையர்கள், தனித்
துணை ஆட்சியர்,
உதவி இயக்குநர்
ஆகியோர் அவ்வப்போது
ஆய்வு செய்து
மனுக்களின் மீது
துரித நடவடிக்கை
மேற்கொள்ளப்படுவதை உறுதி
செய்வர். இந்தத்
திட்டம் படிப்படியாக
அனைத்து துறை
அலுவலர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது
என்றார் ஆட்சியர்.
அப்போது, மாவட்ட
வருவாய் அலுவலர்
பெ. சந்திரசேகரன்,
ஊரக வளர்ச்சி
முகமை திட்ட
அலுவலர் சீனிவாசன்
உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close