காஸா வென்றது! காஸா தெருவோரங்களில் தக்பீர் முழக்கம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்குமிடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.
எகிப்தின் கண்காணிப்பில் இடம்பெற்ற இந்த யுத்தநிறுத்தத்தினை ஏற்படுத்த பங்களித்த கத்தார் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி ஆகியோருக்கு மஹ்மூத் அப்பாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் குறித்த தகவல் வெளியிட்டுள்ள இஸ்ரேலிய சேனல் 2 தொலைக்காட்சி சேவை, யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்டிருப்பதாகவும் அதனை இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் ஸாமி அபூ ஸஹ்ரி தெரிவிக்கையில், இஸ்ரேலிய இராணுவத்தை போராளிகள் வென்றுள்ளனர். யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட சற்று முன்பதாக இரு இஸ்ரேலிய இராணுவத்தினரை போராளிகள் கொன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த அபூ ஸஹ்ரி, காஸா சுற்றுப்புறத்திலிருந்து வெளியேறிச் சென்ற இஸ்ரேலியர்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்ப ஹமாஸ் அனுமதியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது போராளிகள் வான் முற்றுகையொன்றை மேற்கொண்டு ஒட்டு மொத்த அறபுப் படைகளால் இயலாமல் போனதை பாலஸ்தீனப் போராளிகள் சாதித்துக் காட்டியுள்ளனர். மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அடக்கமுடியாத இராணுவம் என்று தம்மட்டமடித்துக் கொண்டிருந்தவர்களின் மரியாதையை போராளிகள் காற்றில் பறக்க விட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த யுத்த உடன்படிக்கை குறிப்பிட்ட கடவைகளை திறப்பதல்ல. குத்ஸை விடுவித்து முழு பாலஸ்தீன வரலாற்றுப் பூமியையும் மீட்கும் வரை தொடரும் எனவும் ஹமாஸின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவத்தை படுதோல்வியடைச் செய்த நிகழ்வையிட்டு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தெருவோரங்களில் இறங்கி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

பலஸ்தீன வெற்றி அறிவிப்பு கொண்டாட்டங்களுக்கு இடையில்யூத வெறியர்களால் கொடூரமாக குண்டு வீசி கொல்லப்பட்ட…

குழந்தைகள்/பெண்கள்/முதியவர்கள்/போராளிகள் அனைவரையும்…

நினைவு கூறி வெற்றியளித்த அல்லாஹ்வுக்கு நன்றியை தெரிவியுங்கள்…,

Advertisement

Close