அதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
அதிரை அரசு மருத்துவனை உள்நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்கிய எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளர்!
அதிரை அரசு பொதுமருத்துவமனையில் பலவருடங்களாக உள்நோயாளிகளாக இருந்துவரும் மூன்று நோயாளிகளுக்கு எவர்கோல்டு காம்பிலக்ஸ் உரிமையாளரும் தொழிலதிபருமான பழஞ்சூர் செல்வம் அவர்கள் இன்று மாலி 6:00 மணியளவில் மருத்துவ உதவி வழங்கினார். இவருடன் அதிரை சேர்மன் அஸ்லம், அதிரை தி.மு.க ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம் அவர்கள் உடனிருந்தனர்.
உதவி பெற்றவர்கள் விபரம்:
அதிரை முன்னால் தி.மு.க நகர செயலார் அபூபக்கர் அவர்களுக்கு ₹10,000 உதவி செய்யப்பட்டது.
மேலும் மதுக்கூர் மற்றும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த இரண்டு உள்நோயாளிகளுக்கும் மருத்துவ உதவி செய்யப்பட்டது.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவம் செய்ய பணம் இன்றி தவிப்பவர்களுக்கு தொடர்ந்து மருத்துவ உதவி செய்துவரும் திரு.பழஞ்சூர் செல்வம் அவர்களுக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுகளைப் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிரை பிறை மூத்த செய்தியாளர்: மணிச்சுடர் சாகுல் ஹமீது

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author