பட்டுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானது! (படங்கள் இணைப்பு)

இன்று பகல் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு பயணிகளை ஏற்றிக் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கரம்பயம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது பின்னால் மதுபானங்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டெம்போ(சின்ன யானை) பேருந்தின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தின் பின்பக்கம் செதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயனிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் பேருந்தின் மீது டெம்போ மோதியதால் வந்த்து பயங்கர சத்தத்தால் பயனிகள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து குறித்து பட்டுக்கோட்டை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் பட்டுக்கோடை – தஞ்சை சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

-அப்துல் ரஷீத்

Advertisement

Close