சவுதியில் வசிக்கும் அதிரை பிறை நேயர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

கேரளாவை சேர்ந்த 82 வயது முதியவரான முஹம்மத் ரஷீத் முஸ்தபா என்பவர் ‘உம்ரா’ என்னும் புனித யாத்திரை செய்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் உறவினர்களுடன் சவுதி அரேபியாவுக்கு சென்றார்.

27-04-2014 அன்று உம்ராவை நிறைவு செய்து விட்டு மக்கா நகரின் பெரிய மசூதி அருகேயுள்ள ஒரு ஓட்டலில் யாத்திரை குழுவினர் தங்கியிருந்தபோது, டீ குடித்துவிட்டு வருவதாக வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் அறைக்கு திரும்பவில்லை.

போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும், ஆஸ்பத்திரிகள் உள்பட பல இடங்களில் விசாரித்தும் சுமார் 4 மாதங்களாக அவரைப் பற்றிய எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவரை சவுதியில் தேடிக் கொண்டிருக்கும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரைப் பற்றிய தகவல் கிடைத்தால் தொடர்பு கொள்ளவேண்டிய சவுதி தொலைபேசி எண்கள் : 0502670412 / 0569632562

சவுதியில் வசிக்கும் நம் அதிரை பிறை வாசகர்கள் இம்முதியவரை காண நேர்ந்தால் அவரை இந்திய தூதரகத்திற்க்கோவை அல்லது காவல் நிலையத்திற்கோ அல்லது அங்கு இயங்கும் இந்திய தொண்டு அமைப்புகளுக்கோ அழைத்து சென்று போதிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொள்றோம்.

அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் இதற்கான நற்கூலியை வழங்குவானாக!

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author