Dr.Pirai….உணவின் மருத்துவக்குணங்கள்:











பீட்ரூட்:


  • பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.

மருத்துவக்குணங்கள்:



  • பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
  • உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
  • சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
  • கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
  • இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
  • எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
  • மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

முள்ளங்கி:

  • முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.

முள்ளங்கியின் வகைகள்:


  • சிவப்பு முள்ளங்கி
  • வெள்‌ளை முள்ளங்கி

மருத்துவக்குணங்கள்:

  • முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
  • முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.
  • சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
  • மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
  •  முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
  • அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.

கேரட்:


  • காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்
  • .

மருத்துவக்குணங்கள்:

  • கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
  • மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி  கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
  •  எனவே தினமும் ஒரு கேரட்  சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.
  • கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.

இஞ்சி:

  • இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவக்குணங்கள்:

  •  இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
  • இஞ்சிப் பசியைத் தூண்டும்.
  • அஜீரணத்தை போக்கும்.
  • கபத்தைக் குணப்படுத்தும்.
  • ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.
  • அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.

உருளைக்கிழங்கு:

  • உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ‌ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.

மருத்துவக்குணங்கள்:

  • உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.
  • மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
  • மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள்  நிறைந்துள்ளது.

கருணைக்கிழங்கு:

  • கருணைக்கிழங்கின் வேறு பெயர்கள் காறாக்கருணை மற்றும் சேனைக்கிழங்கு ஆகும்.

மருத்துவக்குணங்கள்:

  • கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்
  • மேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

குறிப்பு


  • கருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.
பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவக்குணங்களை உணர்ந்து அவற்றை நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

Advertisement

Close