தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு தேர்ச்சிப் பெற்ற அதிரை சிறுவன் [சல்மான் ஃபாரீஸ்]

அதிரை நடுத்தெரு சேர்ந்த அஹமது அன்வர்  அவர்களின் மகன் சல்மான் ஃபாரிஸ் வயது 11. இச்சிறுவன் சென்னை ஆசான் CBSE பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார்.  இச்சிறுவன் நான்காம் வகுப்பிலேயே கிரிக்கெட் விளையாட்டிற்க்காக திருப்பூருக்கு சென்று பல பரிசுகளை தட்டிச்சென்றுள்ளார். இச்சிறுவன் மாவட்ட அளவிலும் பல பரிசுகளை தட்டிச்சென்றுள்ளார். 

இப்பொழுது இச்சிறுவனுக்கு பெங்களூரில் மாநில அளவில் கிரிக்கெட் விளையாட  அழைப்பு வந்துள்ளதும் குறிப்பிடதக்கது. 
சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஸ்கூல் கிரிக்கெட் அஷோசியேஷன் சார்பாக நடைப்பெற்ற விழாவிற்கு விருந்தினராக மாநில ஆளுநர் திரு. ரோசய்யா கலந்துக்கொண்டார்.
இதில் தமிழ்நாடு மாநில சிறுவர் கிரிக்கெட் அணிக்கு தேர்ச்சி அதிரை சிறுவன் சல்மான்  ஃபாரீஸ் க்கு விருது வழங்கப்பட்டது.
மேலும் இவர் அதிரை சிட்னி அணியின் இளம் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Close