FLASH NEWS:அதிரையில் சாலை விபத்து! பெண்ணுக்கு தலையில் காயம்!

அதிரை சேர்மன் வாடியை சேர்ந்தவர் லட்சுமி(50). கட்டிட கூலி தொழிலாழியான இவர் தன்னுடன் வேலை பார்க்கும் நபர்களுடன் மோட்டார் தட்டுவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

இவர்கள் அதிரை ரயில்வே கேட் அருகே சென்றுகொண்டிருக்கையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோதாமல் இருக்க வண்டியை வேகமாக திருப்பியுள்ளார்.

இதனால் வண்டி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டாதால உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.

Advertisement

Close