பதிவுகள்

அதிரை கடைகளில் சிகிரெட் புகையிலை பொருட்கள் விற்பதாக புகார்! சுகாதார துறை அதிகாரிகள் திடீர் சோதனை!

அதிரை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சிகிரெட், பான்பராக், புகையிலை, ஹான்ஸ், புகையிலை பொடி போன்றவைகள்
அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் அதை பள்ளி மாணவர்கள் உட்கொள்வதாகவும் மேலும்
கடைகளில் பாலிதீன் பைகள் விநியோகம் செய்யப்பட்டுவதாகவும் எழுந்த அடுத்தடுத்த புகார்களை
அடுத்து இன்று பகல் 1:00 மணியளவில் அதிரை கடைதெரு பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் 6 பேர் கொண்ட தமிழக சுகாதார
துறை குழு சோதனை செய்தனர்.

இதில் பாலிதீன் பைகளை விநியோகம் செய்த கடைகாரர்களையும் சிகிரெட்
போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகாரர்களையும்
கையும்களவுமாக பிடித்து ஒரு முறை எச்சரித்து விட்டு வந்தனர்.
இது குறித்து சுகாதார அலுவலர் அன்பரசு அவர்கள் நமது செய்தியாளரிடம்
கூறியதாவது…”தமிழகம் முழுவதும்
கடைகளில் பாலிதீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பதை தடை விதித்துள்ளது.
ஆனால் அதிராம்பட்டினத்தின் பல கடைகளில் இவை விற்பனை செய்யப்படுவதாக சுகாதார்
துறைக்கு வந்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று அனைத்து
கடைகளையும் சோதனை செய்து தடையை மீறி விற்பனை செய்தவர்களை எச்சரித்து விட்டு
வருகிறொம். இனி அடுத்த  முறை இது போல் நிகழ்ந்தால் கண்டிப்பாக அந்த கடையின் மீதும் உரிமையாளரின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என
கூறினார்.
அதுபோல் கடைகளின் வாசலில் அதிக அளவில் குப்பைகளை கொட்டியிருந்த
கடைகாரர்களையும் எச்சரித்துவிட்டு சுகாதார் விழிப்புனர்வு நோட்டிசை கடை
உரிமையாளர்களிடம் விநியொகித்துவிட்டு சென்றனர்.

Advertisement

Show More

Related Articles

Close