அதிரை பாத்திமா நகரில் ₹4.25 லட்சம் செலவில் புதிய தார் சாலை

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.N.R.ரங்கராஜன் அவர்களின் தொகுதி
மேம்பாட்டு திட்டத்தின் பழுதடைந்து காணப்பட்ட அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே செல்லும்
பாத்திமா நகர் சாலை மறுசீரமைப்பு செய்யப்பட்டு நேற்று ₹4.25 லட்சம் செலவீட்டில் புதிய தார் சாலை
அமைக்கப்பட்டது.
புதிடாக அமைக்கப்பட்ட  தார் சாலையையும் படங்களில் காணலாம். கடந்த சில
தினங்களுக்கு முன் இது போல் அதிரை ஆப்பக்கார தெருவில் 2 லட்சம்
செலவில் புதிய தார் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது பார்க்க: http://www.adiraipirai.in/2014/08/2_16.html
இது போல் அதிரையின் பல பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல்
பழுதடைந்த நிலையில் தான் உள்ளது. இதையும் மான்புமிகு சட்டமன்ற உறுப்பினர்
கருத்தில் கொண்டு நிதி ஒதுக்கி புதிய தார் சாலைகள் அமைக்க வேண்டும் என அதிரை பிறை
சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

படங்கள்: மொய்தீன் கனி (அதிரை இளைஞர் காங்கிரஸ்)

Advertisement

Close