அதிரையில் மிகப்பெரிய தீ விபத்தை ஏற்படுத்த துடிக்கும் மின் பழுதை சரி செய்யவேண்டும் ! (மறுபதிப்பு)

அதிரை ஈ.சி.ஆர் சாலை பாரத் பெட்ரோலியம் அருகே பிலால் நகர் குடியிருப்பு பகுதியில் இருந்து சாலையை கடந்த எதிர்பக்கமாக மின் கம்பிகள் செல்லுகின்றன. இவை 3 இடங்களில் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டுள்ளன. 

இதனால் இந்த மின் கம்பிகளில் இருந்து தீ பொரிகள் தினமும் வந்து கொண்டிருக்கின்றன. நேற்று முன் தினம் இந்த மின் கம்பிகளுக்கு கீழே தேங்காய் பஞ்சுகளை சுமந்த ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் மின் கம்பியில் இருந்து வந்த தீ பொரிகள் தேங்காய் பஞ்சுகள் மீது விழுந்து தேங்காய் பஞ்சுகள் சில எறிய துவங்கின. உடனடியாக ஓட்டுனர் சுதாரித்துக் கொண்டு லாரி வேறு பக்கம் நிறுத்தினார். இல்லையென்றால் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டிருக்கும்.

சிந்திக்கவும்! மிக அருகில் பெட்ரோல் பங்கு உள்ளது, தீ விபத்து ஏற்பட்டால் ஊர் என்ன ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு அதிரை மின்சார வாரியத்தினர் இப்பணியை துரிதமாக நிறைவேற்றுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இது வரைக்கும் இந்த மின் இணைப்புகளை சரி செய்ய எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கபடவில்லை. ஆகவே இந்த செய்தி மீண்டும் மறுபதிப்பு செய்யபடுகிறது.  

Advertisement

Close