அதிரை பிறை முயற்சியில் உரியவரிடம் லைசன்ஸ் மற்றும் ஏ.டி.எம் கார்டு ஒப்படைக்கப்பட்டது

Want create site? Find Free WordPress Themes and plugins.

நேற்று அதிரையில் நாகூரை சேர்ந்த நஜீர் அஹமது என்பரின் ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏ.டி.எம் கார்டு போன்றவை கீழே கண்டெடுக்கப்பட்டதாகவும் அதனை நமது நிருபர்கள் நூருல் மற்றும் காலித் நமதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதனை செய்தியாகவும் வெளியிட்டிருந்தோம்.

இச்செய்தியையும் இதில் பதியப்பட்ட படத்தினையும் நேற்று பதிந்த சில மணி நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் முகனூலிலும் டெலிகிராம், வாட்ஸ் ஆப்பிலும் பகிர்ந்தனர். 

இதனை அடுத்து இச்செய்தி உடனடியாக நாகூரில் இருந்த லைசன்ஸ் மற்றும் ஏ.டி.எம் கார்டு உரிமையாளர் நஜீர் அவர்களுக்கு சென்றடைந்தது. இதனை அடுத்து இவர் நமது தளத்தில் பதியப்பட்டிருந்த காலித் அவர்களின் அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு விபரத்தை கேட்டறிந்தார்.

இன்று காலை இவர் நாகூரில் இருந்து அதிரைக்கு வந்து நம்மை சந்தித்தார். இதனை அடுத்து இவரை காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று அங்கு இவரிடம் சில விபரங்களை கேட்டறிந்த போலிஸார் நமது செய்தியாளர்கள் காலித் மற்றும் நூருல் முன்னிலையில் லைசன்ஸ் மற்றும் ஏ.டி.எம் கார்டினை ஒப்படைத்தனர்.

காணாமல் போன மிக முக்கியமான ஆவனங்களை ஒரே நாளுக்குள் தன்னிடம் கிடைக்க செய்த அதிரை பிறை க்கும் அதன் செய்தியாளர்களுக்கும் அதிரை காவல் துறையினருக்கு நன்றி கூறி விடைபெற்றார்.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author