அதிரை குளங்களுக்கு நீர் வேண்டி சேர்மன் தலைமையில் பொதுப்பணி துறையிடம் மனு வழங்கப்பட்டது

தற்பொழுது மேட்டூர் அனையில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டு அதிரை சுற்றுவட்டாரப் பகுதி அணைகளுக்கு ஆறுகளுக்கு சென்று வருகிறது. 

இதனை அடுத்து அதிரையில் உள்ள 25க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் ஆற்று நீர் வேண்டி அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் தலைமையில் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கம் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் இணைந்து பட்டுக்கோட்டை பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு இன்று மாலை சென்று சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கோரிக்கை மணு வழங்கினர்.

இதனை அடுத்து விரைவில் அதிரை குளங்களுக்கு ஆற்று நிர் திறக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

அதிரையின் வெப்பத்தையும் தண்ணீர் தட்டுப்பாட்டையும் போக்க நமதூர் குளங்களை ஆற்று நீரால் நிரப்புவது அவசியமானதாகும்

Advertisement

Close