அதிரை A.J. பள்ளியில் நாளை முதல் ஜும்மா தொழுகை! அனைவரும் வருக!

அதிரையில் இது வரை பெரிய ஜும்மா பள்ளி, கடற்கரை தெரு ஜும்மா பள்ளி, ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி, ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளி, A.L ஜும்மா பள்ளி ஆகிய பள்ளிகளில் ஜும்மா தொழுகை நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பழஞ்செட்டித் தெருவில் பல வருடங்களாக ஐ வேலை தொழுகை நடத்தப்பட்டு வரும் A.J. பள்ளியில் ஜும்மா தொழுகை நாளை முதல் துவங்க இருக்கிறது.
இது குறித்து பள்ளிவாசல் துணை தலைவர் அஹமது ஹாஜா அவர்கள் நம்மிடம் கூறுகையில் “அதிரை A.J.பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக 5 வேலை தொழுகை நடைப்பெற்று வருகிறது. தற்பொழுது இப்பள்ளியில் நாளை முதல் ஜும்மா தொழுகை நடத்துவதற்காக உலமா சபையில் அனுமதி பெற்று  நாளை ஜும்மா தொழுகை நடைபெறவுள்ளது.
இதில் உலமாக்களின் சொற்பொழிவு, குத்பா வுக்கு பிறகு ஜும்மா தொழுகை நடைபெறவுள்ளது. இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களும் கலந்துகொண்டு ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Close