கிரிக்கெட் மட்டுமல்ல, இஸ்லாத்திலும் சிறந்தவர் என்று நிருபித்த மொயின் அலி!

Want create site? Find Free WordPress Themes and plugins.

இந்திய அணி கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்துக்கு சுற்று பயணம் சென்று நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது.

இத்தொடரில் இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பெற்றார்.

அதுமட்டுமின்றி இரண்டு செயல்களால் அனைத்து தரப்பு  கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

1. இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காஜா முஸ்லிம்களை கொன்று புதைத்து வரும் இஸ்ரேலிய யூதர்களுக்கு எதிர்பை வெளிபடுத்தவும், காஸா முஸ்லிம்களுக்கு தன்னுடைய அதரவை வெளிபடுத்தவும் போட்டியின் போது தன்னுடைய கையில் சப்போர்ட் காஸா என்று எழுதப்பட்ட பேண்டை தன் மணிக்கட்டில் அணிந்திருந்தார். இச்செயல் அனைவர் மத்தியிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனால் ஐ.சி.சி யின் நடவடிக்கைகு சென்றும் தப்பினார்.

2. இறுதியாக இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய போது பரிசளிப்பு விழாவில் வெற்றி கோப்பை பெறும் போது மதுவினை வைத்து வழங்கப்பட்டதால் கோப்பை பெறும் சமயத்திலும் அல்லாஹ் தடுத்த செயல் அந்த மேடையில் நடப்பதால் அதை புறக்கணிக்கும் விதமாய் மேடையை விட்டு ஒரு ஓரமாக நின்று கோப்பை பெறும் நிகழ்வை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தார்.

இந்த இரண்டு செயல்களினால் உலக அளவில் உள்ள இஸ்லாமிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.

 ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி (அதிரை பிறை)

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author