நடுக்கடலில் தத்தளித்த அதிரை மீனவர்கள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிராம்பட்டினம் அருகில் உள்ள கொள்ளுக்காடு கிராமத்தைச் சேர்ந்த இராஜதுரை என்பவருக்கு சொந்தமான படகில் இவரும் அதே ஊரைச்சேர்ந்த அருளானந்து  மற்றும் மைக்கேல்ராஜ் ஆகிய மூன்று மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

 இந்நிலையில் கடலில் 4அரை பாகத்தொலைவில் மின்பிடித்துக் கொண்டிருந்த போது இவர்களது படகு இன்ஜின் பழுதானது. இதைத்தொடர்ந்து அங்கு உதவிக்கு யாரேனும் வருவார்களா என நீண்டநேரம் காத்திருந்தும் யாரும் வராததையடுத்து கடலோர பாதுகாப்பு குழம கட்டுப்பாட்டு அறையின் இலவச அழைப்பான 1093 என்ற எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்தனர் இதையடுத்து பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழம இன்ஸ்பெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் சேதுபாவாசத்திரம் கடலோர காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் இராஜசேகர் தலைமையில் விஸ்வநாதன் கோபல் உள்ளிட்ட போலீஸார்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவர்களையும் அவர்களது படகையும் மீட்டு கரை சேர்த்தனர்.

இதேபோல் மல்லிப்பட்டித்திலிருந்து சேதுராமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இவரம் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச்சேர்ந்த சின்னப்பன் நீலகண்டன் ஆகியோர் மீன்பிடிக்க கடலுக்குச்சென்றனர் அப்போது 9 நாட்டிகள் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களது படகு பழுதானது இதையடுத்து கடலோர காவல்படைக்கு தகவல் கொடக்கப்பட்டு சேதுபாவாசத்திரம் கடலோர காவல் நிலைய போலீஸார்கள் மற்ற மீனவர்கள் உதவியுடன் கடலில் தத்தளித்த மினவர்களையும் அவர்களது படகையும் மீட்டனர்.

File image

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author