Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


' />

அதிரை அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமனம்!



அதிரை அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் இன்று நியமனம் செய்யப்பட்டார். இதற்க்காக அதிரை மக்கள் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி அவர்களும், தாசில்தார் அவர்களும் இரவு நேர மருத்துவரை நியமிப்பாதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் அடிப்படையில் இன்று புதிய மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவரின் பெயர் ராமசாமி. இவர் பேராவூரனி அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர் ஆவார். இவர் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணி இருப்பார். மேலும் இவர் பொதுநல மற்றும் காது, மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close