துபாயை நேற்று தாக்கிய புழுதி புயல் மூலம் அதிரை அமீன் அவர்கள் கூறும் கருத்து!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அபுதாபி, முஸஃபா, ICAD 2 பகுதியில் நேற்று  புழுதிப் புயல் ஏற்பட்டது. 

தமிழகத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே மாதிரி செய்தி வாசிப்பார்கள் அல்லவா, அதே தோரணையில் நமது தலைப்பையும் படித்துவிட்டு உள்ளே வருக!

நேற்று காலையிலிருந்து என்றுமில்லாத வகையில் வெயில் சுட்டெரித்து சோதனைக்குள்ளாக்கிய வேளையில், மாலையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் திடீர் புழுதிப் புயல் அடித்து ஊரெல்லாம் ஒரே குப்பைமயமானது அதிலும் பாலைவனமும் நகரும் அற்ற ரெண்டும்கெட்டான் பகுதியில் வாழ்வோர் வாரியிறைக்கப்பட்ட பொடி மணலால் (அழுக்கு நிறைந்த தூசியால்) மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர் என்றாலும் அமீரகவாசிகளிடம் ஒரு மகிழ்ச்சி கோடிட்டது ஏன்?

கடந்த சுமார் நான்கு மாதங்களாக கடும் வெயிலால் தகித்த அமீரகத்தின் தட்பவெப்பத்தில் மாற்றம் வரப்போகிறது என்ற முன்னறிப்பே இந்த கடும் மணற்காற்று, செப்டம்பர் 15ந் தேதிக்கு மேல் கடும் வெப்பம், வெக்கையற்ற ஒரு சமநிலை சீதோஷ்ண நிலைக்கும் அதனை தொடர்ந்து குளிர் காலத்திற்கும் திரும்பவுள்ள அமீரகம் மீண்டும் இதுபோல் ஒரு காற்றை மிக சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. 

நேற்றைய புழுதிப்புயலுக்குப்பின் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் தூரல் மழை விழுந்துள்ளன, இதன் மூலம் புயலால் ஏற்பட்ட புழுதி மண்டலம் அடங்கியுள்ளது.

நாம் வெளிநாட்டு வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு கஷ்டங்களில் ஒன்றான அமீரகத்தின் புழுதிப்புயலை பற்றி இவ்வாறு விவரித்து எழுத வேண்டிய அவசியமென்ன?

அறிந்தும் அறியாமலும் நாம் எத்தனையோ தவறு செய்கிறோம் அதிலொன்று நமது பிள்ளைகளின் மீது கொண்டுள்ள அளவுகடந்த பிரியம், தேவையான அனுபவமில்லாத நிலையில், நம்மில் பலர் நமது பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக் கொடுக்க, அவர்களும் கண் மண் தெரியாமல் பறந்து சென்று அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிரையின் அன்றாட செய்தியாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே.

இளமையை வெளிநாடுகளில் தொலைத்த நமக்காவது இறைவனின் கிருபையால் கை, கால்கள் நல்ல முறையில் இருக்கிறது பொருளாதாரத்தை திரட்டிக் கொள்ளவதொரு வாய்ப்பாக, ஆனால் நமது பொறுப்பற்ற தனத்தால் நமது பிள்ளைகள் விபத்தால் கை, கால்களை இழக்க நேரிட்டால்…? எனவே, இதுபோன்ற பல்வேறு கஷ்டங்களுக்கிடையே திரட்டும் பொருளாதாரம் நமது குடும்பத்திற்கு குழி பறிக்கும் ஒன்றாக அமைந்து விடக்கூடாது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் எம்பெண்களின் வீண் ஆடம்பரத்தையே திட்டுவது?

(எதை கொண்டு வந்து எதில் முடிச்சுப் போடுகிறேன் என திட்டாதீர்கள், புழுதிப் புயலை ஒரு செய்தியாக தர வேண்டும் என நினைத்த பொழுது இதையும் சேர்த்து பயனுள்ள செய்தியாக தரலாமே என்று என் மனம் நாடியது).

அதிரைஅமீன்

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author