அதிரை TNTJ அபுதாபி கிளையின் ஒருங்கிணப்பு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 15.08.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.40 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 3,840/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 18,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Advertisement

Close