காயல்பட்டினம் சமுக ஆர்வலர் சதக்கத்துல்லாஹ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விரூது

சென்னையில் வசித்து வரும் காயல்பட்டினம் சார்ந்த சமுக ஆர்வர் எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ். இவரின் ரத்த பிரிவான A1B நெகடிவ் ஓர் அரிய வகை ரத்தப் பிரிவாகும். பல நாடுகளில் ஒரு சதவீத மக்களுக்கும் கீழே தான் இந்த வகை ரத்தம் உள்ளது என கூறப்படுகிறது.
1993ம் ஆண்டு முதல் இதுவரை 47 முறை ரத்த தானம் செய்துள்ள இவர், மத நல்லிணக்கம் உட்பட பல சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளார். ஆகஸ்ட் 11 அன்று சென்னையில் இருந்து வெளிவரும் மாலை ஆங்கில நாளிதழான CHENNAI METRO சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இவருக்கு தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசையா – சமுக சேவைக்கான வாழ்நாள் சாதனை விருது வழங்கினார்.
தகவல்: Kavimagan Kader

Advertisement

Close