அதிரை லாவண்யா மஹால் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

நேற்று இரவு பட்டுக்கோட்டையில் இருந்து அதிரைக்கு ஆட்டோ ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதில் ஓட்டுனர் உட்பட 3 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் லாவன்யா மண்டபம் அருகே இந்த ஆட்டோ சென்ற பொழுது வேகத்தினால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதில் பெரிய அளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேகத்தினால், நிதானமின்மையாலும், கவனக்குறைவினாலும் அதிரை வாரத்துக்கு 2 சாலை விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தும், உடல் உறுப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

-கோப்பு படம்

Advertisement

Close