Dr.Pirai-உடல் எடையை கூட்டும் உலர்திராட்சை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

dr.pirai new

உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும் இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.

உலர் திராட்சையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுபோக்கு பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால் ஒல்லியாக இருக்கும் பெண்கள் தங்கள் உடல் எடை அதிகரிக்க நினைத்தால் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரார்கள் கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப்பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இது உடனடியாக ஆற்றலை தருவதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றை கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில் அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், இரத்த குழாய்களில் அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச்சத்து நிறைவாக உள்ளது. இது இரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால் இரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.

குறிப்பு

இயற்கை முறையில் உலர வைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. மிகவும் பழைய உலர்திராட்சையை வாங்குவதை விட நடுத்தரமானதை தேர்தெடுத்து வாங்குவது மேலும் சிறந்தது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author