பீட்டாகரோட்டின். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு எண்ணெயில் பொரித்த கேரட் உணவைத் தருவது நல்ல பலனைத் தரும்.

  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட்டைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட்டில் அதிகமாக அசிடிக் அமிலங்கள்  இல்லாததால் வயிற்றுப் புண் (ulcer) பாதிப்பு இருப்பவர்களுக்கு, கேரட் சூப் செய்து கொடுப்பது நல்லது. கேரட்டில், பால் சேர்த்து மில்க்ஷேக் போல் சாப்பிடலாம். கண்கள், எலும்பு வளர்ச்சி மற்றும் பற்களுக்கும் கேரட் மிகவும் நன்மை தரும்.
 
கேரட்டில் மாவுச் சத்தும், நார்ச் சத்தும் அதிகமாகவே உள்ளன. மேலும் இதில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று 'கரையக்கூடிய நார்ச் சத்து’. நம் உடலில் இருந்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மைகொண்டது கேரட்.

  கேரட்டில், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உண்டு. உடலில் அவ்வப்போது ஏற்படும் புண்கள், கேரட் உண்பதால் எளிதில் குணமாகும்.
நல்ல நிறத்தில் காணப்படும் புதிதான கேரட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். கேரட் வெகு எளிதில் கெட்டுப் போகாது. எனவே இரண்டு, மூன்று நாட்கள் வரைகூட ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். கேரட்டை வேகவைத்து உண்பது ரொம்பவே பயன் தரும். கேரட்டுடன், கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவுவதால் முகம் புத்துணர்ச்சியாகவும் இளமையாகவும் இருக்கும். கேரட் சாப்பிடுவதன் மூலம் பொலிவான தோற்றத்தையும் பெறலாம்.'' என்றார்.
உடலில் எதிர்ப்பு சக்திக்கென கலர் கலரான பல மருந்துகளை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், அவ்வப்போது கேரட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமே!
     
Advertisement

' />

Dr.pirai…கேன்சரை தடுக்கும் கேரட்!

கேன்சரை தடுக்கும் கேரட்! 

  ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் முதன்முதலில் பயிரிடப்பட்ட கேரட், செடியின் வேர்ப்பகுதியில் திரண்டு வளரும் ஒரு வேர்க் காய். வடிவத்தில் முள்ளங்கியைப் போல் இருந்தாலும், சுவையில் இரண்டுக்கும் வேறுபாடுகள் அதிகம்.  

கேரட்டின் முக்கியப் பயன்கள் மற்றும் சத்துக்கள் குறித்து ஊட்டச் சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது…
”கேரட்டில் இருக்கும் ஒரு முக்கியமான சத்து.
  சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட்டைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். கேரட்டில் அதிகமாக அசிடிக் அமிலங்கள்  இல்லாததால் வயிற்றுப் புண் (ulcer) பாதிப்பு இருப்பவர்களுக்கு, கேரட் சூப் செய்து கொடுப்பது நல்லது. கேரட்டில், பால் சேர்த்து மில்க்ஷேக் போல் சாப்பிடலாம். கண்கள், எலும்பு வளர்ச்சி மற்றும் பற்களுக்கும் கேரட் மிகவும் நன்மை தரும்.
 
கேரட்டில் மாவுச் சத்தும், நார்ச் சத்தும் அதிகமாகவே உள்ளன. மேலும் இதில் இருக்கும் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று ‘கரையக்கூடிய நார்ச் சத்து’. நம் உடலில் இருந்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மைகொண்டது கேரட்.
  கேரட்டில், நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் தாது உப்புகளும், வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவதால், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை உண்டு. உடலில் அவ்வப்போது ஏற்படும் புண்கள், கேரட் உண்பதால் எளிதில் குணமாகும்.
நல்ல நிறத்தில் காணப்படும் புதிதான கேரட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். கேரட் வெகு எளிதில் கெட்டுப் போகாது. எனவே இரண்டு, மூன்று நாட்கள் வரைகூட ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். கேரட்டை வேகவைத்து உண்பது ரொம்பவே பயன் தரும். கேரட்டுடன், கொஞ்சம் பால் சேர்த்து மிக்ஸியில் அரைத்து முகத்தில் தடவுவதால் முகம் புத்துணர்ச்சியாகவும் இளமையாகவும் இருக்கும். கேரட் சாப்பிடுவதன் மூலம் பொலிவான தோற்றத்தையும் பெறலாம்.” என்றார்.
உடலில் எதிர்ப்பு சக்திக்கென கலர் கலரான பல மருந்துகளை எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், அவ்வப்போது கேரட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் போதுமே!
   
Advertisement

Close