Advertisement

' />

சுதந்திர தியாகிகளாகிய அதிரை சிறுவர்கள்!!!

முன்பெல்லாம் சுதந்திர தினம், குடியரசு தினம் என்றால் பள்ளிகளில் மாறுவேட போட்டிகள் நடைபெறும். அப்பொழுது பாரதியார், காந்தி, நேரு, நேதாஜி போன்ற சுதந்திர தியாகிகள் போன்று வேடம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவார்கள். நேரு வேடம் அணிந்து கோர்ட்டு பாக்கெட்டில் ரோஜாவுடன் வரும் சிறுவர்களை நேரு மாமா என்று அழைப்பதும் காந்தி வேடம் போல் வெண்மை துணி சுற்றி குச்சியுடன் வரும் சிறுவர்களை காந்தி தாத்தா என்று கூறி கிண்டலடிப்பதும் தனி அலாதிதான்.
ஆனால் தற்போதைய காலங்களில் எந்த பள்ளிகளிலும் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவது இல்லை, மாணவர்களும் அணிந்து வருவதும் இல்லை. ஆனால் இந்த வருடம் நமதூர் வெஸ்டர்ன் மழலையர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த சில மாணவர்கள் மகாத்மா காந்தி, பாரதியார் போன்ற தியாகிகள் வேடத்தில் வந்தது அணைவரையும் கவர்ந்தது. 
அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்ற பள்ளிகளிலும் இது போன்ற போட்டிகள் நடத்தவேண்டும. அப்பொழுது தான் இந்த தியாக நாளில் சிறுவர்களுக்கு நாட்டுக்காக போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்த அந்த தியாக செம்மல்களின் சிந்தனை வரும்.

 

Advertisement

Close