அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரில் VVFC மணச்சை, பள்ளத்தூர் அணிகள் வெற்றி!

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA) நடத்தும் 12 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால் பந்து தொடர் போட்டி இன்று (04-05-2015) மாலை 5 மணியளவில் ஷிஃபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

 இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் நாகூர் அணியை எதிர்த்து தென்னரசு நினைவு பள்ளத்தூர் அணி விளையாடியது. இதில்  என்ற கோல்கணக்கில் தென்னரசு நினைவு பள்ளத்தூர் அணி  2-0 என்ற கோல் கணக்கில் நாகூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இரண்டாவது ஆட்டத்தில் VVFC மணச்சை அணியை எதிர்த்து பட்டுக்கோட்டை AVK அணி விளையாடியது. ஆட்ட முடிவில் இரண்டு அணிகளும் 1-0 என்ற நிலையில் மணச்சை அணி வெற்றி பெற்றது. இன்றைய இரண்டு அட்டாங்கள் நடைப்பெற்றதால் ரசிகர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

நாளைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கோட்டையூர் 7s கோட்டையூர் அணியும் அதிரை AFFA அணியை எதிர்த்து VVFC மனச்சை அணியினர்  விளையாட உள்ளனர்.

அதிரை AFFA கால்பந்தாட்ட தொடரின் தினசரி முடிவுகளை அறிய அதிரை பிறையுடன் இணைந்திருங்கள்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close