லாரல் பள்ளி மாணவர்கள் சாதனை!

பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஓவியப்போட்டி சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலிருந்தும் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என 3 பிரிவுகளாக போட் டிகள் நடத்தப்பட்டது.
இதில் பள்ளிகொண்டான் லாரல் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் எம்.ஆலன் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளுக்கான பிரிவில்
“2020ல் நகர வாழ்க்கை” எனும் தலைப்பில் வரைந்த ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசை பெற்றது.

இதே பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் ஆர்.தினேஷ்குமார் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புகளுக்கான பிரிவில் “விண்வெளி மண்டலம்” எனும் தலைப்பில் வரைந்த ஓவியம் சிறந்த ஓவியமாக தேர்வு செய்யப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றது.
மாணவர்களுக்கு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

Courtesy:dinakaran

Advertisement

Close