இந்திய விடுதலைத் திருநாள் சிந்தனைகள்”

http://www.youtube.com/watch?v=VANsyXmcXsA

பலமுடன் கூடியே பிரிட்டனின் ஆட்சி
விலக்கிய வேளையை விடுதலை நாளாய்
நலமுடன் பாடியே நினைவினில் ஏந்தி
வளமுடன் வாழவே வழுத்துவோம் இன்றே!

உயிரினைத் துச்சமாய் உணர்ந்ததால் தியாகப்
பயிரினால் அச்சமில் பரதமும் கிடைத்த
முயற்சியின் உச்சமாய் முழுவதும் நினைப்போம்
கயிற்றினில் கட்டுள இழையென இனிதே!


இரவிலும் பகலிலும் இடர்களைக் கொடுத்த
கரங்களை விரட்டிய கணமதை நினைத்து
மரத்தினில் படர்ந்துள கிளைகளாய்க் குடும்ப
உறவினை உணர்வுடன் அளித்திடும் தினமே!

விடியலாய்த் தெரிந்திடும் விடுதலை பெறவே
கடினமாய் உழைத்தநற் றலைமையை மதித்து
படித்தவர் படிப்பிலார்ப் பொருட்டிலா நிலையில்
குடியர சதனிலும் குறிப்பிடு விழைந்தே !நடத்திடும் செயலிலும் நியாயமாய் இருந்தால்
கடந்திடும் நிகரிலாக் குணத்தினாய் இருந்தால்
கடலொடும் மலைகளும் கடந்துதான் விரைவாய்ப்
படர்ந்திடும் பரதமின் புகழெலாம் சிறந்துஉறுதியாய்ப் பிடித்துளம் நிறைவுடன் ஒருமைப்
பெறுதலைப் பரப்புக பெரிதினும் பெரிதாய்
”பரதமே எனதென” பெருமிதம் வழிய
வரட்டுமே உணர்வுடன் வளர்ச்சியும் நிறைந்தே !

““கவியன்பன்” கலாம், 
அதிராம்பட்டினம் ( பாடசாலை), 
அபுதபி (தொழிற்சாலை)

Close