அக்டோபரில் தேர்வெழுதும் +2 மாணவர்கள் ஆன்லைனில் பதியலாம்

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் +2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் வரும் 14ம் தேதி வரை நேரடியாக சென்று கீழ்கண்ட மையங்களில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என்று தஞ்சை கல்வி மாவட்ட அலுவலர் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மட்டும் தஞ்சை மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவிகள் மட்டும் தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவ, மாணவிகள் திருவையாறு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் தங்களது விண்ணப்பங்களை வரும் 14ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

Close