அதிரையை சேர்ந்த லாரல் பள்ளி மாணவர்களின் பல நாள் கஷ்டத்துக்கு தீர்வு!

லாரல் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் துளை துரத்தில் இருந்து  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் நீண்ட காலமாக வண்டிப்போட்டை பஸ் நிறுத்திலிருந்து லாரல் பள்ளி  வாகனத்தில் ஏறிச்செல்வதும் ஒரு சில  நேரங்களில் பள்ளி வாகனத்தை தவறவிடுவதும் என பல சிறமங்களை சந்தித்துவந்தனர்

இதை அறிந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் லாரல் பள்ளியின் தாளாலரை நேரில் சந்தித்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நியாயமான கோரிக்கையை ஏற்று தாளாலர் அவர்கள் திங்கள் முதல் அதிரை பெரிய ஜும்ஆ பள்ளி அருகில் புதிதாக பஸ் நிறுத்தத்திற்கு அனுமதியளித்தார்கள் அதன் படி திங்கள் முதல் சானாவயல் கீழத்தெரு மற்றும் அதை சுற்றியுள்ள மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஜும்ஆ பள்ளி நிறுத்தத்திலிருந்து ஏறிச்செல்கிறார்கள் இந்த பஸ் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்த தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றியும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

-ADIRAI TNTJ

Advertisement

8

Close