அதிரையில் அட்டூழியம்! பைக்கில் சென்றவர்களை தாக்கி வழிபறி!

கீழத்தோட்டம் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் ராஜ்மோகன்(29), அதே ஊர் கீழத்தெருவை சேர்ந்தவர்  செந்தில்(35) ஆகிய இருவர்களும் அதிரையில் இருந்து இன்று இரவு 8:00 மணியளவில் கீழத்தோட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இவர்கள் இராஜாமடம் அருகே சென்று கொண்டிருக்கையில் கையில் உறுட்டு கட்டைகளுடன் 2 இரு சக்கர வாகணங்க்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜ்மோகன், செந்தில் ஆகிய இருவரையும் சரமாறியாக தாக்கி அவர்களிடம் இருந்த 2 சவரன் செயின் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து தப்பிவிட்டனர்.

இந்நிலையில் காயமடைந்த 2 பேரையும் பின்னால் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் சிலர் மீட்டு அதிரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் கட்டையால் தாக்கப்பட்டதில் ராஜ்மோகனுக்கு தலையிலும், செந்திலுக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Close