அதிரையில் நடைபெற்ற தமுமுக வின் சுதந்திர தின நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

இன்றுடன் நமது நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்து விட்டது. நாடு முழுவதும் இதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதனை அடுத்து அதிரையிலும் பள்ளி கல்லூரிகள், சமுதாய அமைப்புகள், அரசு அலுவலகங்கள் ஆகியற்றில் கொடியேற்றி சுதந்ததிர தின விழா கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் அதிரை தமுமுக அலுவலகம் அருகே தமுமுக வின் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்க்கு தமுமுக துணை தலைவர் செய்யது முஹம்மது புஹாரி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இதில் காதிர் முஹைதீன் பள்ளி முன்னால் ஆசிரியர் ஹனிபா அவர்கள் கலந்துக்கொண்டு கொடியேற்றி சிறப்பித்தார்கள். இதனை தொடர்ந்து மமக நகர் செயலாளர் இத்ரிஸ் அவர்கள் சிறப்புறை நிகழ்த்தினார்கள். இதில் நகர தமுமுக செயலாளர் சாதிக் பாட்சா, மமக முன்னால் செயலாளர் ஹாலித், மாணவர் இந்தியா ஒருங்கிணைப்பாளர் சேக் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இறுதியாக நசுருத்தீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.imageimageimageimageimageimage

Close