அதிரையர் கலந்துகொண்ட துபாய் தமிழர் சங்க தொழிழ் பிரிவு துவக்க விழா

Want create site? Find Free WordPress Themes and plugins.

(தமிழகத்திலிருந்து துபாய் வந்து வேலை தேடும்
தமிழ் சகோதரர்களுக்காக ஆண்டு வாடகைக்கு எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட
Villa துவக்க விழா )

08.08.2014 அன்று மாலை 6.30 மணியளவில் தெய்ரா துபாய் ETA
Star House க்கு பின்புறம் உள்ள DUTAS தமிழ் Batchelor ரூம்ஸ் திறப்பு
விழா துபாய் தமிழர் சங்கமத்தின் நிறுவனர் திரு. எக்ஸலன்ட் முருகேஷ் அவர்கள்
தலைமையிலும் , ஒருங்கிணைப்பாளர் திரு பாளை அப்துல் கரீம் , கலை இலக்கிய
பிரிவு செயலாளர் அதிரை திரு கவியன்பன் கலாம் , தொழிற் பிரிவின்
மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி , IT Head திரு. ராஜ்குமார்
ஆகியோர் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
வில்லா நுழைவு வாயிலை துபாய்
தமிழர் சங்கமத்தின் நிறுவனரின் அன்னையார் திருமதி ராமாமிர்தத்தம்மாள்
அவர்கள் திறந்து வைத்து வாழ்த்தினார். 

டாக்டர் சுமதி முருகேசன் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார் .
ரூம் “அ” வை நத்தம் திரு சாதிக் அவர்களும்,
ரூம் “ஆ” வை காயல்பட்டினம் மௌலான மௌலவி திரு.சுலைமான் ETA , மூன் டிவி ஆலிம் அவர்களும்
ரூம் “இ ” வை சாகுல் ஹமீது (துபாய் ஹெல்த் ஆதாரிட்டி) அவர்களும்
ரூம் “ஈ ” வை நெல்லை ஜிந்தா அவர்களும்
ரூம் “உ ” வை திரு கவியன்பன் கலாம் அவர்களும்
ரூம் “ஊ ” வை திரு பாளை அப்துல் கறீம் அவர்களும் திறந்து வைத்தனர்

Villa வை நமக்கு பிடித்து கொடுத்த திரு சாதிக் அவர்களுக்கு ஒரு கிராம்
தங்க காசும் மிகசிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் DUTAS தொழிற் பிரிவின்
மார்க்கெட்டிங் Head திரு.முஸ்தபா நூரணி அவர்களுக்கு ஒரு கிராம் தங்க
காசும் அன்பளிப்பாக அளித்து கௌரவிக்கப்பட்டது.

DUTAS நிறுவனர்
தமது தலைமை உரையில் DUTAS ன் அடுத்த வெற்றி திட்டமான “மில்லியன்ஸ் ” (
துபாயில் 1 கேட்டரிங் யூனிட் 10 மினி ரெஸ்டரென்ட் ) என்ற திட்டத்தை
அறிமுகப்படுத்தினர். அதற்க்கான Project Demo விரைவில் வெளியிட உள்ளதாகவும்
உலக தமிழர்களை தொழிற் ரீதியாக ஒருங்கிணைக்க துபாய் தமிழர் சங்கமம்
மேற்கொள்ளும் இந்த அறிய முயற்சிக்கு தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு
தருமாறு வேண்டுகோள் விடுத்தார்

விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் IT Head திரு. ராஜ்குமார் அவர்கள் நன்றி கூறினார் .

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author