இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும்

Want create site? Find Free WordPress Themes and plugins.

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் 

http://www.satyamargam.com/images/stories/seetharaman1.jpg
மத்தியக் கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது, 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற சீதாராமன், சிறந்த பேச்சாளரும்கூட. பொருளியல் பிரச்சினை குறித்துப் பல நூல்களையும் எழுதியுள்ளார். தஞ்சாவூருக்குச் சொந்தக்காரரான இவர்,இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது.என அழுத்தமாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அவர் அளித்த நேர்காணல் :

*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?

வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம்.ஈட்டப்படுகின்றது. இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது. மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.

*இஸ்லாமிய வங்கிவட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை. இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Sharing and Caring) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன. இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம், மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்குவதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Equity) நிதியுதவி அளிக்கிறோம். இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.

*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்?

‘ஷுகுக்’ எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை ஏற்படுத்த உள்ளோம். பொறுப்புணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளனமொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன?இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?

இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.

*இது உலகமயமாக்கல் காலம். இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்றச் சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்துப் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?

இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம் காரணம். சொத்து வங்கிப் பரிவர்த்தனைக்குப் (Asset – Banked Transactions) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் (Asset – Based Transactions) ஈடுபடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன. உற்பத்திப் பொருள்களும் (Products) சொத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?

இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும். நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.
சந்திப்பு : ஏ.ஆர்

திரு. சீதாராமன்: மத்தியக் கிழக்கின் கத்தர் நாட்டில்வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின்முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும்ஆர்.சீதாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்துஅழுத்தமாக வாதிடக்கூடியவர். பிரைஸ்வாட்டர்ஹவுஸ் அண்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும்பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கியஇவர், தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில்பயின்றவர். கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ளஇவர் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தேர்ச்சிபெற்றுள்ளார்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல் குர்ஆன் 3:104)

நன்றி- சமரசம்.

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author