சென்னையில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பட்டத்தில் அதிரையர் உட்பட பலர் பங்கேற்ப்பு

சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று மாலை 4:00 மணி முதல் 6:30 மணி வரை காஜா வில் 2000க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களை கொன்று புதைத்து வெறியாட்டம் நடத்தி வரும் பயங்கரவாத இஸ்ரேலியர்களை கண்டித்து தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த 23 இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த நிர்வாகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டமைப்பில் இல்லாத விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களும், மே17 இயக்கத்தினரும் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் இதில் சமுதாய தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள், சமுக ஆர்வலர்கள் கலந்துகொண்டு மழையையும் பாராது இஸ்ரேலை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Close