பதிவுகள்

Dr.Pirai – ஆரெஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்…

 ஆரெஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள்…

கண் பார்வை

கரோட்டினாய்டு என்னும் பொருள் ஆரஞ்சுப் பழத்தில் அதிகம் இருப் பதால், அதனை சாப்பிடும் போது, அது உடலில் வைட்டமின் ஏ சத்தானது மாறி, கண்களில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு தடுக்கும்.

கொலஸ்ட்ரால்:

ஆரஞ்சுப்பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந் திருப்பதால், அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக் கும்

எடை குறைவு:

ஆரஞ்சு பழத்தை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி, கல்லீர லில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

சிறுநீரக நோய்கள்

தினமும் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சிறு நீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதிலும் சிறு நீரகக் கற்கள் ஏற்படாமல் தடுக்கமுடுயும். குறிப்பாக, ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிகப்படியான சர்க் கரை போடவேண்டாம். ஏனெனில் அவை பற்களை சொத்தையாக்கிவிடும்.

மலச்சிக்கல்

ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கி, மலச் சிக்க ல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

 புற்றுநோய்

ஆரஞ்சு பழத்தில் லெமோனாய்டுகள் என்னும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழ த்தை சாப்பிட்டால், பல வகையான புற்றுநோய்கள் வருவதை தடுக்கலாம்.

பொலிவான சருமம்:

ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டீன் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. ஆகவே இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். மேலும் முதுமைத் தோற்றமும் தடைபடும்.

மூட்டு வலிகள்

மூட்டுகளில் வலிகளோ அல்லது வீக்கங்களோ இருந்தால், அப் போது ஆரஞ்சு ஜூஸை தினமும் குடித்து வந்தால் குணமாகும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருளானது அதிகம் நிறைந்துள்ளது.

வலுவான பற்கள்:

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட் டால், வலுவான பற்களைப் பெறலாம்.

வைரஸ்  நோய்த்தொற்றுகள்

ஆய்வு ஒன்றில் ஆரஞ்சுப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால் என்னும் பொருள், உடலில் வைரஸ் நோய்த் தொற்று கள் ஏற்படாதவாறு பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது.

Advertisement

Show More

Related Articles

Close