அதிரையில் தாருத் தவ்ஹீத் நடத்திய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான S.M.அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்
“நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக
மாற்றங்கள்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.
இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சொற்பொழிவின் நிறைவாக இறுதியாக 
கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Close