அதிரையில் ப்லாஸ்டிக் பைகளுக்கு மீண்டும் தடை!!!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு அதிரை பேரூராட்சியால் ப்லாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து பெரும்பாலான கடைகளில் ப்லாஸ்டிக் பைகள் வழங்கப்படாமல் துணி பை விநியோகிக்கப்பட்டது.
சில நாட்கள் கழித்து மீண்டும் அதிரையில் உள்ள அனைத்து கடைகளில் ப்லாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிரை பேரூராட்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் ப்லாஸ்டிக் பைகள், கப்புகள் உபயோகிப்பது அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி ப்லாஸ்டிக் பைகள் உபயோகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ப்லாஸ்டிக் பைகள் வழங்கும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author