ஐ.எஸ்.ஐ.எஸ். பெயர் பனியன் அணிந்த 2 பேர் கைது

ஈராக்  அமைப் பான
ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயர்
பொறித்திருந்த பனியன் அணிந்திருந்த
2 வாலிபர்கள் தொண்டிமயில்
கைது செய்யப் பட்டனர். மேலும் 4
பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 26
இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.
என்ற ஈராக் நாட்டை சேர்ந்த
அமைப்பின் பெயர் பொறித்திருந்த
பனியன்களை அணிந்திருந்த
புகைப்படம் சமீபத்தில் வளை தளங்களில்
வெளியானது. இதைத்தெடர்ந்து போலீசார்
அதிரடி விசாரணை நடத்தினர்.
அப்போது தொண்டி காதர் முகைதீன்
தெருவைச் சேர்ந்த முகமது பலீல் மகன்
அப்துல் ரகுமான் (வயது29),
அவரது நண்பர் கலிபுல்லா மகன்
முகமதுரில்வான் (24) என்பவரையும்
தொண்டி போலீசார்
அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் அணிந்திருந்த பனியனில்
ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற ஈராக் நாட்டின்
அமைப்பின் பெயர்
பொறிக்கப்பட்டு இருந்தன.
இதுதொடர்பாக அவர்களிடம்
விசாரணை நடத்தியபோது,
அப்துல்ரகுமான் மலேசியா,
தாய்லாந்து போன்ற
நாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்து வந்துள்ளார்.
அப்போது ஈராக் நாட்டில் உள்ள அந்த
தீவிரவாத
அமைப்பை பற்றி கேள்விபட்டு அதன்மீது ஏற்பட்ட
ஆர்வத்தில் தானும் அதுபோல
பெயருடைய பனியன் அணிய
விரும்பினார்.
இதற்காக திருப்பூர் மாவட்டம்
காதர்பேட்டையில் உள்ள ஒரு பனியன்
நிறுவனத்தில் ஆர்டர்
கொடுத்து இதுபோன்ற
பனியன்களை வாங்கி வந்ததாகவும்,
அவற்றை சிலருக்கு கொடுத்ததாகவும்
விசாரணையில் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அப்துல்ரகுமான்,
முகமதுரில்வான் ஆகிய 2 பேரையும்
போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் ராமநாத புரம் மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன்
நேரிடையாக விசாரணை நடத்தினார்.
அதன் பிறகு அவர்கள் மீது சட்ட
விரோதமாக கூடுதல், சதி திட்டம்
தீட்டுதல் போன்ற பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அப்துல் ரகுமானின்
நண்பர்கள் மேலும் 4 பேர் போலீசில்
பிடிபட்டனர். அவர்களிடமும் போலீசார்
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-Maalaimalar

Close