அதிரையர் சவூதியில் விபத்துக்குள்ளானதை வைத்து போலி புகழ் தேடும் அப்ஹா தமிழ் சங்கமும் அதிரை இணையதளமும்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.
நேற்று முந்தினம் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு அதிரையை சேர்ந்த ஒரு குடும்பம் காரில் அப்ஹாவுக்கு சுற்றுலா சென்று காரில் திரும்புகையில் விபத்துக்குள்ளானதாகவும் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிரையின் ஒரு இணையதளத்தில் பதியப்பட்டிருந்தது.
இதில் விபத்துக்குள்ளான அதிரை குடும்பத்தாருக்கு மருத்துவமனையில் உதவ அபஹா தமிழ்ப்
பேரவை வைரமுத்து,சுவாமி நாதன்
மற்றும் நண்பர்கள் தயாராக உள்ளனர். என்ற ஒரு தகவலும் பதியப்பட்டது.
இது முற்றிலும் பொய்யான தகவலாகும். விபத்து நடந்ததில் இருந்து காயமடைந்தவர்களை அருகில் இருந்து கவனித்து வருவது அதிரையை சேர்ந்த ஒரு பெயர் கூற விரும்பாத ஒரு சகோதரர் தான்.
விபத்து குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களோ அவர்களின் அபஹா தமிழ் பெரவையோ இது வரை எந்த உதவியும் செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஒரு குடும்பமே இப்படி விபத்தில் காயமடைந்து தவித்து வரும் நிலையில் இவர்களுக்கு இப்படி ஒரு போலி புகழ் தேவைதானா. இப்படிப்பட்ட பொய்யான செய்தியை அந்த இணையதளத்தில் பார்த்த காயமடைந்த குடும்பதாருக்கு இச்செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
இப்படிபட்ட செய்தியை பதிவிட்டு ஒரு சிலருக்கு போலி புகழ் தேடி தருவதில் அந்த இணையதளதிற்க்கு என்ன லாபம் என தெரியவில்லை.
இந்த செய்தியில் பதியப்பட்டுள்ள அந்த பொய்யான தகவலை நீக்க வேண்டும் என காயமடைந்த அந்த குடும்பத்தாராலும் அவர்களுடன் உண்மையாக இருந்து உதவி வரும் அந்த பெயர் கூற விரும்பாத சகோதரராலும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author