பதிவுகள்

தமிழக முஸ்லிம்களை பாராட்டிய வாஸ்கோடாகாமா.

தமிழக முஸ்லிம்களை பாராட்டிய வாஸ்கோடாகாமா.

 சிங்கப்பூர்,மலேசியா,இந்தோனேஷியா,தாய்லாந்து,புருனே உள்ளிட்ட நாடுகளோடு 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழக முஸ்லிகளுக்கு வணிக தொடர்பு இருந்திருக்கிறது.
  தங்கள் நேர்மையான வணிகத்தின் மூலமாக, இஸ்லாத்தை இப்பகுதியில் பரப்பியதில் அரேபியர்களுக்கும்,குஜராத்திகளுக்கும் என்ன பங்கு உள்ளதோ அதே பங்கு தமிழக முஸ்லிகளுக்கும் உண்டு.இப்பகுதியில் வணிகத்தோடு கிரித்தவ மதத்தையும் பரப்ப வந்த போர்ச்சுகீரியர்கள்,தமிழக முஸ்லிம்கள் மீதுதான் கோபம் கொண்டனர்.அவர்களின்  வணிக திறனும்,சாம்ராஜ்யமும் இப்பகுதி மக்களிடம் பெரும் செல்வாக்கோடு திகழ்ந்ததை போர்ச்சுகீசியர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
 மலேஷியாவில் மலாக்கா சுல்தான்னின் ஆட்சியிலும் டச்சுகாரர்களின் ஆட்சியிலும்,போர்ச்சுகீசியர்களின் ஆட்சியிலும் தமிழ் முஸ்லிம்கள் செல்வாக்கோடு திகழ்ந்தனர்.கப்பலோட்டும் திறம் படைத்ததால் டச்சிக்காரர்கள் இவர்களை பொதுவாக கேப்டன் என்று பட்டமளித்து கெளரவித்தனர். SOME NOTES ON THE HISTORY OF THE TAMIL COMMUNITY IN DUTCH MALACCA.என்ற நூலில் இது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடாகாமா தனது டைரியில், சோழ மண்டல கடற்கரையை சேர்ந்த இம்முஸ்லிம்களை மரைக்காயர்கள் எனவும், வணிகத்திறமை மிகுந்தவர்களென்றும் பராட்டி குறிப்பிடுகிறார். 
 தமிழக முஸ்லிகளின் வியாபார சாம்ராஜ்யத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத போர்ச்சுகீசியர்கள்,அவர்களுக்கு பல துன்பங்களை கொடுத்தனர் அவர்களது சரக்கு கப்பல்களை தாக்கி அழித்தனர்.இவர்களது அட்டூழியத்தை அடக்க கேரளாவில் ஆட்சி செய்த குஞ்சாலி மரைக்காயர்கள் என்ற சகோதர மன்னர்கள் 8 ஆண்டுகள் போர்ச்சுகீசியர்களோடு கடற்போரில் ஈடுபட்டனர்.நாகப்பட்டினம் அருகில் கடர்போர் நடந்தது.அவர்களது நினைவாக நாகூரில் ஒரு தெருவுக்கு குஞ்ஞாலி மரைக்காயர் தெரு என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.இந்திய போர்க்கப்பல் ஒன்றுக்கும் ஜ.என்.எஸ்.குஞ்ஞாலி என்று பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Show More

Related Articles

Close