ஈவ்டீசிங் செய்த ஆசிரியருக்கு மாணவிகள் அளித்த தண்டனை

ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் ஈவ் டீசிங் செய்த ஆசிரியரை மாணவிகள் ஒன்று சேர்ந்து அடித்து, உதைத்த சம்பவம் நடந்துள்ளது.

புவனேஷ்வரில் உள்ள உட்கல் பல்கலை மாணவிகளை அங்குள்ள தனியார் பள்ளி ஆசிரியர் பினோத் குமார் சாஹூ என்பவர் கிண்டல் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், கம்புகளுடன் அவரை அடித்து உதைத்தனர். மேலும், அவரை மண்டியிட்டு மன்னிப்பும் கேட்கச் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பினோத் குமார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

Close